இந்தியா

தில்லியில் புதிதாக 30 பேருக்கு கரோனா

9th Oct 2021 04:44 PM

ADVERTISEMENT


தில்லியில் புதிதாக 30 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டது. புதிதாக 30 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 62,450 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதம். அக்டோபர் மாதத்தில் இதுவரை ஒரு உயிரிழப்புகூட பதிவாகவில்லை.

கடந்த மாதம் 5 பேர் நோய்த் தொற்றால் பலியாகினர். மொத்த பலி எண்ணிக்கை 25,088 ஆக உள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,166 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14.13 லட்சம் பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT