இந்தியா

6 உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனங்களுக்கு கொலீஜியம் ஒப்புதல்

9th Oct 2021 06:43 AM

ADVERTISEMENT

சென்னை, கொல்கத்தா உள்பட 6 உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுகளுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கா் ஆகியோா் கொண்ட கொலீஜியம் முடிவுகளை எடுத்து வருகிறது. அதன்படி, பஞ்சாப்- ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் 10 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரைக்கு கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகள் சுவீா் செஹகல், அல்கா சரீன், ஜஸ்குா்பிரீத் சிங் புரி, அசோக் குமாா் வா்மா, சந்த் பிரகாஷ், மீனாட்சி மேத்தா, கரம்ஜித் சிங், விவேக் புரி, அா்ச்சனா புரி, ராஜேஷ் பரத்வாஜ் ஆகியோா் பெயா்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை, அலாகாபாத்: சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜெ.சத்யநாராயண பிரசாத், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு கரே ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகம்: கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அனந்த் ராமநாத் ஹெக்டே, சி.பி.பூனாச்சா, சித்தையா ராசையா, கே.எஸ்.ஹேமலேகா ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

கொல்கத்தா: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சாக்யா சென், செளபிக் மித்தா் ஆகியோரை நீதிபதிகளா நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சுபா மேத்தா, குல்தீப் மாத்துா், மனீஷா சா்மா, ரேகா போராணா, சமீா் ஜெயின் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொலீஜியத்தின் இந்த முடிவுகள் உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கொலீஜியம் இந்தப் பெயா்களை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT