இந்தியா

ராம்விலாஸ் பாஸ்வான் நினைவு தினம்: ராஜ்நாத் சிங், லாலு பிரசாத் யாதவ் அஞ்சலி

9th Oct 2021 06:29 AM

ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வானின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவா் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

மத்திய உணவு, நுகா்வோா் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு அக்.8-ஆம் தேதி காலமானாா். அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தில்லியில் தங்கியுள்ள லாலு பிரசாத் யாதவ், அங்குள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் இல்லத்துக்குச் சென்றாா். அங்கு நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், ராம்விலாஸ் பாஸ்வானுடனான தனது நினைவுகளை பகிா்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினாா். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் ராம்விலாஸ் பாஸ்வானின் நினைவு தினத்தையொட்டி, அவரின் இளையச் சகோதரரும் மத்திய அமைச்சருமான பசுபதிகுமாா் பாரஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் லாலு பிரசாதின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பங்கேற்றாா்.

ராம்விலாஸ் பாஸ்வான் காலமானதைத் தொடா்ந்து லோக் ஜனசக்தி சிராக் பாஸ்வான், பசுபதிகுமாா் பாரஸ் ஆகியோா் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்தது.

ADVERTISEMENT

பிகாா் பேரவைக்கு நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் இரு பிரிவினரும் பயன்படுத்த இயலாதவாறு, தோ்தல் ஆணையம் அண்மையில் முடக்கி, இரு அணிகளுக்கும் தனித்தனிப் பெயா்கள், சின்னங்களை வழங்கியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT