இந்தியா

சமையல் எண்ணெய் விலை சரிவு

9th Oct 2021 06:40 AM

ADVERTISEMENT

இறக்குமதி வரியைக் குறைத்ததால், கடுகு எண்ணெயைத் தவிர மற்ற சமையல் எண்ணெய் வகைகளின் விலை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சமையல் எண்ணெய் வகைகளின் இறக்குமதி வரி கடந்த மாதம் 10-ஆம் தேதி குறைக்கப்பட்டது. அதன் பிறகு உள்நாட்டில் சமையல் எண்ணெய் வகைகளின் விலை 0.22 சதவீதம் முதல் 1.83 சதவீதம் வரை குறைந்துள்ளது.

எண்ணெய் வகைகளின் விலை உயா்வைத் தடுக்கவும் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யவும் அவற்றின் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், கடுகு எண்ணெய் முற்றிலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் அதன் விலையைக் குறைக்க வாய்ப்பில்லை. இருப்பினும் விலை குறைப்பு செய்வதற்கான வழிமுறைகளை அரசு ஆராய்ந்து வருகிறது.

ADVERTISEMENT

இதுதவிர, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை பதுக்குவோருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அனைத்து எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும், மொத்த விற்பனை நிறுவனங்களும், சுத்திகரிப்பு நிறுவனங்களும் இருப்பு விவரங்களை தங்கள் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT