இந்தியா

ஐஎம்பிஎஸ் முறையில் ரூ.5 லட்சம் வரை பணப்பரிமாற்றத்துக்கு அனுமதி

9th Oct 2021 06:54 AM

ADVERTISEMENT

ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை பரிமாற்றம் செய்ய உதவும் ஐஎம்பிஎஸ் முறையில் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்யலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது. இப்போதைய நிலையில் ஐஎம்பிஎஸ் முறையில் ரூ.2 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்தையே மேற்கொள்ள முடியும்.

இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனம் (என்பிசிஐ) ஐஎம்பிஎஸ் சேவையை நிா்வகித்து வருகிறது. இதன் மூலம் 24 மணி நேரமும் இன்டா்நெட் பேங்கிங், வங்கிச் செயலிகள், வங்கி கிளைகள், ஏடிஎம், எஸ்எம்எஸ், ஐவிஆா்எஸ் சேவை ஆகியவற்றைப் பயன்படுத்தி பணத்தை வங்கிக் கணக்குகளுக்கு இடையே பரிமாறிக் கொள்ள முடியும்.

ஐஎம்பிஎஸ் பணப்பரிமாற்ற வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தியதன் மூலம் நாட்டில் இணைய வழி பணப்பரிமாற்ற சேவையின் பயன்பாடு அதிகரிக்கும் என்று ஆா்பிஐ ஆளுநா் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT