இந்தியா

செப். 12 அன்று நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

4th Oct 2021 02:59 PM

ADVERTISEMENT

நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்யகோரிய மனுவை  உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்தேர்வு கடந்த செப். 12 அன்று நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஷ்வர ராவ் மற்றும் கவாய் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது நீதிபதிகள், வெறும் 5 எஃப்.ஐ.ஆர். பதிவுகளை மட்டும் வைத்து 7.5 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள தேர்வினை ரத்து செய்யப்பட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து மனுவுக்கு தங்களின் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

பின்னர் அபராதத் தொகையை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டதால், அதை ஏற்றுக்கொண்டு அபராதத்தை மட்டும் ரத்து செய்து நீதிபதிகள் அறிவித்தனர். 

இதையும் படிக்க | நீட் தேர்வு: 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT