இந்தியா

'இதுவரை 70% முதல் தவணை, 25% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி'

4th Oct 2021 06:09 PM

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 70 சதவிகித இளைஞர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

அதேபோன்று 25 சதவிகிதம் மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கரோனாவுக்கு எதிரான போரில் புதிய இலக்கை நாடு எட்டவுள்ளது. 

மத்திய அரசு தரவுகளின்படி நாட்டில் 25 சதவிகிதம் மக்களுக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

70 சதவிகிதம் இளைஞர்களுக்கு முதல் தவணை முடிந்துள்ளது. இதுவரை 90 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT