இந்தியா

ஷாருக்கான் மகனுக்கு அக். 7 வரை போலீஸ் காவல் நீட்டிப்பு

4th Oct 2021 06:27 PM

ADVERTISEMENT

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா ஆகியோரை மும்பை போலீஸ் நேற்று கைது செய்தது. இதையடுத்து கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

அப்போது ஆர்யன்கான் உள்பட 3 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்யன்கான் உள்ளிட்டோரை அக்டோபர் 7 வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT