இந்தியா

ஐந்து மாநில தேர்தல் செலவில் முதலிடம் பிடித்த திரிணமூல்; விவரத்தை வெளியிடாத பாஜக

3rd Oct 2021 04:45 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில், 5 மாநில தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகையைத் தேசிய மற்றும் மாநில கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்ப்பித்துள்ளன. ஆனால், பாஜக தேர்தல் செலவு விவரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. 

இந்த விவரங்களின் அடிப்படையில், அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் மொத்தமாக 154.28 கோடி ரூபாயை மேற்கு வங்கத்தின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியுள்ளது. 

ஐந்து மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் 84.93 கோடி ரூபாயை செலவழித்துள்ளது. தேர்தல் செலவு பட்டியலில் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் மொத்தமாக 114.14 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்கபோராட்டக் களத்தில் இறங்கிய பெண்கள்; துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான்கள்

இதில், 39.78 கோடி ரூபாயை ஊடகத்தில் விளம்பரங்களை வெளியிடுவதற்காக செலவழித்துள்ளது. நிலுவையில் உள்ள குற்றச்செயல்கள் குறித்த வேட்பாளர்களின் விவரங்களை வெளியிடுவதற்காக 54.47 கோடி ரூபாய் பணம் வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இருமாநில சட்டப்பேரவை தேர்தலுக்கும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலுக்கும் மொத்தமாகவே 57.33 கோடி ரூபாயை அதிமுக செலவழித்துள்ளது. இதில், 56.65 கோடி ரூபாயை விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளது. செய்தித்தாள், தொலைக்காட்சி விளம்பரம், ஆன்லைன் விளம்பரம், குறுஞ்செய்தி ஆகியவை அடங்கும். இந்திய கம்யூனிஸ்ட் 5 மாநில தேர்தலுக்கு மொத்தமாகவே ரூ.13.19 கோடிதான் செலவழித்துள்ளது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT