இந்தியா

லடாக்கை தொடர்ந்து உத்தரகண்டில் சீனா ஊடுருவல்; சரமாரி கேள்விகளை எழுப்பும் ராகுல் காந்தி

3rd Oct 2021 04:13 PM

ADVERTISEMENT

கடந்தாண்டு, லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் மோதல் நிகழ்ந்தது. இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இருநாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

லடாக்கை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, உத்தரகண்டில் உள்ள பரஹோதி பகுதியில் 100க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமரிசித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "சீனா + பாகிஸ்தான் + மிஸ்டர் 56 இன்ச் ஆகியோரின் காரணமாக இந்தியாவில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பரஹோதி பகுதிக்கு சென்ற சீன ராணுவ வீரர்கள் சில மணி நேரங்கள் அங்கிருந்துவிட்டு பின்னர், திரும்பி சென்றுவிட்டனர் என தகவல் அறிந்து ஒரு சிலர் கூறியுள்ளனர். ஆனால், சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

ADVERTISEMENT

கிழக்கு லடாக் மோதல் காரணமாக இந்திய, சீன நாடுகளுக்கிடையே கருத்து மோதல் வலுத்துவரும் நிலையில், இரண்டு பதற்றமான எல்லை பகுதிகளிலிருந்து இரு நாடுகளும் தங்களின் ராணுவ வீரர்களை முழுவதுமாக திரும்பபெற்றுள்ளனர். இதற்கு மத்தியில், இந்த ஆக்கிரமிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கல்வான் மோதலுக்கு பிறகு, 3,500 கிமீ தூரம் உள்ள இந்திய, சீன எல்லைப் பகுதியை இந்திய ராணுவம் தீவிரமாக கண்காணித்துவருகிறது.

Tags : China rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT