இந்தியா

உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடி: பிரதமர் மோடி பாராட்டு

3rd Oct 2021 06:28 PM

ADVERTISEMENT

காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 
காதி துணி கொண்டு கையால் நெய்த 1,000 கிலோ எடைகொண்ட தேசியக் கொடி லடாக்கில், காந்தி ஜெயந்தியையொட்டி சனிக்கிழமை நிறுவப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மிகப் பெரிய தேசியக் கொடியாகும். 
இந்த நிலையில் காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடிக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், “காதி மீது விரிவான ஆர்வம் கொண்டிருந்த மதிப்புக்குரிய பாபுவுக்கு ஒப்பற்ற புகழஞ்சலியாக இது உள்ளது. 

இதையும் படிக்க- அக்.15-க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி

இந்த விழாக்காலம் காதி மற்றும் கைவினைப் பொருட்களை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், தற்சார்பு இந்தியாவை கட்டமைக்கும் தீர்மானத்தை வலுப்படுத்துவதாகவும் அமைய வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : Pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT