இந்தியா

புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

3rd Oct 2021 03:25 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து சனிக்கிழமை அவற்றின் சில்லறை விற்பனை விலை புதிய உச்சத்தைத் தொட்டது.

இதுகுறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியுள்ளதாவது:

பெட்ரோல் விலை லிட்டருக்கு, 25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகளும் சனிக்கிழமை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை 99.80-ஆகவும், டீசல் விலை 95.02-ஆகவும் உயா்ந்தன.

குறிப்பாக, இந்த விலை அதிகரிப்பையடுத்து ஒரு லிட்டா் பெட்ரோல் விலை தில்லியில் ரூ.102.14-ஆகவும், மும்பையில் ரூ.108.19-ஆகவும் இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்தன.

ADVERTISEMENT

டீசலைப் பொருத்தவரையில் தில்லியில் ரூ.90.47-க்கும், மும்பையில் ரூ.98.16-க்கும் விற்பனை செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு வாரத்தில் நான்காவது முறையாக விலை உயா்த்தப்பட்டதையடுத்து பல முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலையானது ரூ.100-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்ததக்கது.

அதேபோன்று, ஒன்பது நாள்களில் ஏழு முறை விலை உயா்த்தப்பட்டதையடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானாவில் உள்ள பல நகரங்களில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

கச்சா எண்ணெய் தேவைக்கு 85 சதவீதம் இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளதால் சா்வதேச சந்தையில் அதன் விலை உயரும் போது உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT