இந்தியா

தேர்தல் வெற்றி: மம்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

3rd Oct 2021 03:23 PM

ADVERTISEMENT

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேற்குவங்கத்தில் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

பவானிபூர் தொகுதியில் தொடக்கம் முதலே முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அவர், வாக்கு எண்ணிக்கையின் 21 சுற்றுகள் முடிவில், பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலை 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க | பவானிபூர் தொகுதியில் 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி!

ADVERTISEMENT

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பவானிபூர் இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றதற்கு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள். இது, மேற்குவங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீளமுடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க | வாக்களித்தவர்களுக்கு நன்றி; நந்திகிராம் தோல்வி ஒரு சதிவேலை - மம்தா பானர்ஜி உரை

Tags : MK stalin WestBengal Mamata Banerjee bhabanipur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT