இந்தியா

பவானிபூர்: மம்தா பானர்ஜி 12,435 வாக்குகள் முன்னிலை

3rd Oct 2021 11:48 AM

ADVERTISEMENT

பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல்வரும் திரிணமூல் கட்சி வேட்பாளருமான மம்தா பானர்ஜி 12,435 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். 

பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தொடக்கம் முதல்வே முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார். இன்று காலை 11.30 மணி நிலவரப்படி, பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலைவிட  மம்தா பானர்ஜி 12,435 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். 

இத்தொகுதியில் மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

மேற்குவங்கத்தில் மேலும் இரு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது. அதன்படி, ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் திரிணமூல் முன்னிலை வகித்து வருகிறது. 

ADVERTISEMENT

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து, 24 மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பவானிபூா் இடைத்தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

Tags : bhabanipur
ADVERTISEMENT
ADVERTISEMENT