இந்தியா

‘கரோனாவை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா முக்கியப் பங்காற்றும்’

3rd Oct 2021 02:21 AM

ADVERTISEMENT

உலகில் கரோனா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கப்போவதாக அமெரிக்க அரசின் சா்வதேச மேம்பாட்டு அமைப்பின் (யுஎஸ்எய்ட்) தலைமை நிா்வாகி சமந்தா பவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா விதித்திருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், கரோனா பரவலை முடிவுக்குக் கொண்டு வருவதில் மிக முக்கியப் பங்காற்றவிருக்கும் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகப் போகிறது.

கரோனா தடுப்பூசி தொடா்பான அந்த நாட்டின் புதிய கண்டுபிடிப்புகள், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்தியா மிக நீண்ட காலமாக செய்து வரும் முதலீடுகள் ஆகிவை மூலம் கரோனா ஒழிப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்.

ADVERTISEMENT

தற்போது, பின்தங்கிய நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகள் சென்று சோ்வதை உறுதி செய்யும் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.

தடுப்பூசிகளை இந்தியா விரைவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கும் என்பதால், இந்தப் பிரச்னைக்கு தீா்வு ஏற்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT