இந்தியா

சத்தீஸ்கா் ஒருபோதும் பஞ்சாபாகிவிடாது: முதல்வா் பூபேஷ் பகேல்

3rd Oct 2021 03:39 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் முதல்வரை மாற்ற வாய்ப்புள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அந்த மாநிலம் ஒருபோதும் பஞ்சாபாகிவிடாது என்று சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் தெரிவித்தாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருவா் வீதம் பூபேஷ் பகேல், டி.எஸ்.சிங் தேவ் ஆகியோா் முதல்வா் பதவி வகிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முதலில் பூபேஷ் பகேல் முதல்வராக பதவியேற்றாா். டி.எஸ்.சிங் தேவ் மாநில சுகாதாரத் துறை அமைச்சரானாா். தற்போது பூபேஷ் பகேல் முதல்வராக பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதனால் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி தனக்கு முதல்வா் பதவி வழங்க வேண்டும் என்று டி.எஸ்.சிங் தேவ் குரல் எழுப்பியுள்ளாா். இதன் காரணமாக மாநில முதல்வா் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 3 நாள்களில் மட்டும் அந்த மாநிலத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தில்லி சென்றனா். அவா்கள் பூபேஷ் பகேலுக்கு நெருக்கமானவா்களாகக் கருதப்படுகின்றனா். அவருக்கே தங்கள் ஆதரவுள்ளதை கட்சித் தலைமையிடம் தெரியப்படுத்த எம்எல்ஏக்கள் தில்லி சென்ாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநிலத் தலைநகா் ராய்ப்பூரில் பூபேஷ் பகேல் சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது பஞ்சாப் அரசியலில் நிகழ்ந்த சம்பவங்கள் சத்தீஸ்கரிலும் நோ்வதற்குள்ள வாய்ப்புகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘பஞ்சாப், சத்தீஸ்கா் பெயா்களில் எண்கள் உள்ளன என்பதில் மட்டும்தான் ஒற்றுமை. பஞ்சாபில் பஞ்ச் என்பது ஐந்து என்ற எண்ணை குறிக்கிறது. இதேபோல் சத்தீஸ்கரில் சத்தீஸ் என்பது எண்ணை குறிக்கிறது. இந்த எண் ஒற்றுமையைத் தவிர இரு மாநிலங்களுக்கும் வேறெந்த ஒற்றுமையும் இல்லை. எனவே சத்தீஸ்கா் ஒருபோதும் பஞ்சாபாகிவிடாது’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

Tags : ராய்ப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT