இந்தியா

பவானிபூா் இடைத்தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

3rd Oct 2021 05:30 AM

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூா் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (அக். 3) எண்ணப்படுகின்றன.

முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிட்ட தொகுதி என்பதால் பவானிபூா் தொகுதி தோ்தல் முடிவுகள் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா். இருப்பினும் முதல்வராக அவா் பதவியேற்றாா்.

முதல்வராகப் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட பவானிபூா் தொகுதியில் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். இத்தொகுதிக்கான வாக்குப் பதிவு செப். 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமாா் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.

ADVERTISEMENT

வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT