இந்தியா

உ.பி. வன்முறை: விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

3rd Oct 2021 10:12 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரில் சென்றபோது விவசாயிகள் கருப்புக்கொடி காட்ட முயற்சித்துள்ளனர். அப்போது விவசாயிகள் மீது காரை அவர் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் விவசாயிகள் 2 பேர் பலியானதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் அடித்து நொறுக்கியதோடு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். 
இச்சம்பவத்தால் லக்கிம்பூரில் கடும் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கலைத்தபோது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் உள்பட 8 பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் இல்லை என்பதற்கான விடியோ ஆதாரம் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். 

இதையும் படிக்க- வாணியம்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து முன்னாள் மாவட்ட ஆட்சியர் பலி

இந்த நிலையில் உ.பி. லக்கிம்பூரில் நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகள் மீதான பாஜக அரசின் அக்கறையின்மை மிகவும் வேதனைப்படுத்துகிறது. விவசாயிகளுக்கு திரிணமூல் காங்கிரஸின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதேநேரம்  உ.பி.யில் வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூர் பகுதிக்கு காங்கிரஸின் பிரியங்கா காந்தி நாளை செல்கிறார். 

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT