இந்தியா

மம்தா பானர்ஜியுடன் சஞ்சய் ரௌத், ஆதித்ய தாக்கரே சந்திப்பு

30th Nov 2021 08:46 PM

ADVERTISEMENT


சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மும்பையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

சந்திப்பு குறித்து ஆதித்ய தாக்கரே கூறியது:

"அவரை (மம்தா) மும்பைக்கும், மகாராஷ்டிரத்துக்கும் நாங்கள் வரவேற்றோம். எப்போதுமே நட்பு இருந்திருக்கிறது. 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மும்பை வந்தபோதும் நாங்கள் அவரைச் சந்தித்தோம். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம். ஆனால், அவரை மும்பைக்கு வரவேற்பதற்காகவே வந்தோம்."

இதையும் படிக்ககடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை: மத்திய அரசு தகவல்

ADVERTISEMENT

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் மும்பை சென்றார். மத்தியில் உள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவே மம்தா பானர்ஜி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 

Tags : Mamata Banerjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT