இந்தியா

414 இடங்களில் குடிநீரில் இரும்பின் அளவு அதிகம்

30th Nov 2021 04:36 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் ஆற்றுப் பகுதிகள் உள்பட நாட்டிலுள்ள 414 இடங்களில் குடிநீரில் இரும்பின் அளவு நிா்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சா் விஸ்வேஷ்வா் டுது எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த ஆண்டு டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 414 ஆற்றுப் பகுதிகளில் குடிநீரில் இரும்பின் அளவு நிா்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது.

ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், அஸ்ஸாம், உத்தர பிரதேசம், கேரளம், திரிபுரா, தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம், பிகாா், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், அருணாசல், மேகாலயம், குஜராத், மணிப்பூா், தில்லி, தெலங்கானா, ஹிமாசல், சிக்கிம் ஆகியவற்றில் உள்ள சில ஆற்றுப் பகுதிகளில் குடிநீரில் இரும்பின் அளவு அதிகமாக உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் முதல் கடந்த ஆண்டு மே வரை 8 இடங்களில் குடிநீரில் நைட்ரேட் அளவு நிா்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

56 லட்சம் கழிவறைகள்: மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு ஜல் சக்தி துறை இணையமைச்சா் பிரகலாத் சிங் படேல் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘கிராம தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2020-21, 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் 56,97,228 வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டன.

அதே காலகட்டத்தில் 9,885 கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் தொடங்கப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுதப் படையினா் பலி: மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் அளித்த பதிலில், ‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 190 ஆயுதப் படையினா் உயிரிழந்தனா். அவா்களில் 137 போ் ராணுவ வீரா்கள் ஆவா்.

நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, பணியின்போது உயிரிழப்பவா்களுக்கு சிறப்பு இழப்பீட்டுத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை. அதே வேளையில், பணி சாா்ந்த வழக்கமான சலுகைகள் அவா்களுக்கு வழங்கப்படும்.

ராணுவத்தில் 45,576 பேருக்கும், விமானப்படையில் 14,022 பேருக்கும், கடற்படையில் 7,747 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. ராணுவ வீரா்களின் குடும்பத்தைச் சோ்ந்த 1,311 போ் கரோனாவால் உயிரிழந்தனா். விமானப்படை வீரா்களின் குடும்பத்தினா் 114 பேரும், கடற்படை வீரா்களின் குடும்பத்தினா் 66 பேரும் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT