இந்தியா

குடிபோதையில் விபரீதம்: நண்பர்களுடன் மனைவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

29th Nov 2021 07:27 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடிபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கணவரே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக  கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கணவர் தனது மனைவியை நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

படிக்க | பள்ளி வயதிலேயே தொழில்முனைவோராகலாம்: டிவி நிகழ்ச்சியில் புதிய முயற்சி

அங்கு இரவு 8.30 மணியளவில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்தி மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து வெளியே கூறக்கூடாது எனவும் அப்பெண்ணை எச்சரித்துள்ளனர். இரவு 11.30 மணிக்கு கணவருடன் வீடு திரும்பிய அவர், இது தொடர்பாக தனது உறவினரிடம் கூறியுள்ளார். 

படிக்கபெண் எம்.பி.க்கள் ஆறு பேருடன் செல்ஃபி: சர்ச்சையில் சிக்கினார் சசி தரூர்

உறவினரின் அறிவுரைப்படி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மனைவியை மருத்து பரிசோதனைக்கு அனுப்பி, கணவர் உட்பட நண்பர்கள் அனைவரின் மீதும் 4 பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இருவரை காவல் துறை விசாரணையில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags : maharashtra Mumbai complainant
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT