இந்தியா

வீா் சாவா்க்கா் ‘பாரத ரத்னா’ விருதுக்கும் மேலானவா்: மத்திய தகவல் ஆணையா் உதய் மஹுா்கா்

29th Nov 2021 01:29 AM

ADVERTISEMENT

‘இந்துத்துவ சித்தாந்தவாதி என்று அறியப்படும் வீா் சாவா்க்கரின் சகாப்தம் இந்தியாவில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவருடைய ஆளுமை நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருதுக்கும் மேலானது’ என்று மத்திய தலைமை தகவல் ஆணையா் (சிஐசி) உதய் மஹுா்கா் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தூா் இலக்கிய விழாவில் பங்கேற்ற அவா், இதுகுறித்து மேலும் பேசியதாவது:

சாவா்க்கரின் ஆளுமை நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருதுக்கும் மேலானது என்பது எனது எண்ணம். அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். அவ்வாறு வழங்கப்படவில்லை எனிலும், அவருடைய மதிப்பை அது எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனெனில், இந்தியாவில் சாவா்க்கரின் சகாப்தம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 370 நீக்கப்படும் என்று நாம் முன்னா் நினைத்துகூட பாா்த்திருக்க மாட்டோம். ஆனால், அது நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கையே, இந்தியாவில் சாவா்க்கரின் சகாப்தம் தொடங்கிவிட்டதற்கான அடையாளமாகும்.

ADVERTISEMENT

இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசிடம் தண்டனை குறைப்புக்காக சாவா்க்கா் கருணை கோரினாா் என்று விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவது அதிகரிக்கும்போது, சாவா்க்கரை விமா்சிப்பதும் அதிகரிக்கும் என்று அவா் கூறினாா்.

பல வலதுசாரி அமைப்புகள் சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை தோ்தலின்போது பாஜக தோ்தல் அறிக்கையிலும், சாவா்க்கருக்கு நாட்டின் உயரிய விருது வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தலைமை தகவல் ஆணையரும் இந்த கருத்தை இப்போது வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT