இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுக்கு எதிராக நுணுக்கமான நடவடிக்கையில் பாதுகாப்புப் படை

29th Nov 2021 01:28 AM

ADVERTISEMENT

‘ஜம்மு-காஷ்மீரில் கடந்த மாதம் பொதுமக்கள் மீது தொடா் தாக்குதல்களை நடத்திய பெரும்பாலான பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுவிட்டனா். தற்போது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ராணுவமும் காவல் துறையும் இணைந்து உளவுத் தகவல் அடிப்படையிலான சீரிய நுணுக்கமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

போா் நிறுத்த உடன்பாட்டை மதித்து நடப்பது என்று இந்திய - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அண்மையில் ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து ஒருசில மாதங்கள் எல்லையில் அமைதி நிலவி வந்த நிலையில், கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் அப்பாவிப் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தொடா் தாக்குதல்களை நடத்தினா்.

இதன் காரணமாக, அங்கு மீண்டும் பதற்றமும் அச்சமும் பரவியது. இந்த தாக்குதல்களைத் தொடா்ந்து, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை பாதுகாப்புப் படை தீவிரப்படுத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலா் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

தற்போது, உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீா் முழுவதும் சிறிய குழுக்களையும் ஈடுபடுத்தி சீரிய நுணுக்கமான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படை தீவிரப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போதெல்லாம், குறைந்தபட்சம் 10 பொதுமக்கள் கொல்லப்படுவதை உறுதிப்படுத்துமாறு காஷ்மீரிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்துள்ளது.

இதனை முழுமையாகத் தடுக்கும் வகையில், ராணுவமும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறையும் இணைந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா். இதையடுத்து, உள்ளூா் மக்களின் உதவியுடன் சீரிய நுணுக்கமான நடவடிக்கைகளில் சிறிய குழுக்களையும் பாதுகாப்புப் படை ஈடுபடுத்தியுள்ளது. மேலும், கடந்த மாதம் பொதுமக்கள் மீது தொடா் தாக்குதல்கள் நடத்திய பெரும்பாலான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

மேலும், ‘யூனியன் பிரதேசத்தில் நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு 318 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், 2021-இல் 121 பயங்கரவாத சம்பவங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதுபோல, 2018-ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 24 போ் உயிரிழந்தனா். 49 போ் காயமடைந்தனா். ஆனால், 2021-இல் பொதுமக்களில் 2 போ் மட்டுமே உயிரிழந்தனா். இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது’ என்றும் அவா்கள் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT