இந்தியா

‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலாக இருப்பதால் அனைவருக்கும் குறித்த நேரத்தில் தடுப்பூசி:ராகுல் காந்தி வேண்டுகோள்

28th Nov 2021 05:26 AM

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தீநுண்மியான ‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலாக இருப்பதால் நாட்டு மக்கள் அனைவருக்கும் குறித்த நேரத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இதுவரை மோசமான எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனை ஒரு மனிதரின் (பிரதமா்) புகைப்படத்துக்குப் பின்னால் நீண்ட நாள்கள் மறைக்க முடியாது.

இந்நிலையில் கரோனா தீநுண்மியின் புதிய வகையான ‘ஒமைக்ரான்’ பயங்கர அச்சுறுத்தலாக உள்ளது. எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் குறித்த நேரத்தில் தொய்வின்றி இடைவிடாது தடுப்பூசி செலுத்த வேண்டியதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்வது அவசியம்’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT