இந்தியா

அனைத்துக் கட்சிக் கூட்டம்: எதிர்க்கட்சிகள் முன்வைத்தது என்ன?

28th Nov 2021 04:18 PM

ADVERTISEMENT


கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வது உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுப்பின.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் 31 கட்சிகள் பங்கேற்றன. வெவ்வேறு கட்சிகளிலிருந்து 42 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

இதையும் படிக்க7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் செயல்படும் அரசு தமிழ்ப்பள்ளி: தமிழர்கள் அதிர்ச்சி

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியது:

ADVERTISEMENT

"அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பார் என எதிர்பார்த்தோம். சில காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப்பெற்று விட்டது. ஆனால், விவசாயிகளுக்கு அந்த சட்டங்கள் குறித்து புரியவைக்க முடியவில்லை எனப் பிரதமர் கூறினார். அப்படியென்றால், எதிர்காலத்தில் வேறொரு வடிவத்தில் இந்த சட்டம் திரும்பக் கொண்டுவரப்படலாம் என்று அர்த்தம்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தோம். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு கொடுக்க வேண்டும்.

பண வீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்னை மற்றும் கரோனா விவகாரங்கள் உள்ளிட்டவை அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எழுப்பப்பட்டன. குறைந்தபட்ச ஆதரவு உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தினோம்" என்றார் கார்கே.

Tags : All Party Meet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT