இந்தியா

லூதியானாவில் உள்ள 2 மனை வணிக நிறுவனங்களில் வருமான வரி சோதனை

28th Nov 2021 03:27 AM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள 2 பெரிய மனை வணிக நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து அந்தத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த சோதனை, கடந்த 16-ஆம் தேதி தொடங்கி, லூதியானாவில் உள்ள 40 இடங்களில் நடைபெற்றது. அந்த இரு குழுமங்களில் நடைபெற்ற சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளின்போது, கணக்கில் வராத பணத்தின் மூலம் சொத்து விற்பனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்த ஆவணங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நபா் ஒருவரின் வீட்டை கட்டுவதற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத சுமாா் ரூ. 2 கோடி பணம், அந்நியச் செலாவணி, சுமாா் ரூ. 2.30 கோடி மதிப்புள்ள நகைகள் இந்த சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT