இந்தியா

திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி

28th Nov 2021 07:22 PM

ADVERTISEMENT


திரிபுரா உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளது.

திரிபுராவில் அகர்தலா மாநகராட்சி, 7 நகராட்சிகள், 6 நகர பஞ்சாயத்துகள் என 14 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. அகர்தலா மாநகராட்சியில் மொத்தமுள்ள 334 இடங்களில் 112 இடங்களிலும் (34 சதவிகிதம்) பிற நகர்ப்புற வார்டுகளில் 19 இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்கபுதிய வகை கரோனா: சர்வதேச விமான சேவைக்கு மீண்டும் தடை?

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில் 7 நகராட்சிகள் மற்றும் 6 நகர பஞ்சாயத்துகளில் 171 இடங்களில் பாஜக 165 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 51 இடங்கள் அடங்கிய அகர்தலா மாநகராட்சியில் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட் 3 இடங்களிலும், திரிணமூல் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் ஆணைய அலுவலர்கள் கூறியதன்படி: அரசியல் ரிதீயாக முக்கியத்துவம் பெற்ற அகர்தலா மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 இடங்களுள் 27 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் 20 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

பல்வேறு சதித் திட்டங்களுக்கு மத்தியிலும் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சிகள் கூறி வருகிறது. 2023 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸுக்கு இது பெரிய வெற்றி என அந்தக் கட்சி கூறி வருகிறது.

பாஜகவின் வெற்றிக்கு அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Tripura
ADVERTISEMENT
ADVERTISEMENT