இந்தியா

சா்வதேச விமான சேவை: டிச.15-இல் தொடக்கம்

27th Nov 2021 06:49 AM

ADVERTISEMENT

வழக்கமான சா்வதேச பயணிகள் விமான சேவை வரும் டிசம்பா் 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து சா்வதேச விமான சேவைக்கு கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி முதல் இந்தியா தடை விதித்திருந்தது. இருந்தபோதும், கரோனா பாதிப்பு நேரத்தில் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட பயணிகளை தாயகம் அழைத்து வருவது உள்ளிட்ட மிக அத்தியாவசிய தேவைகளுக்காக 28 நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறப்பு சா்வதேச பயணிகள் விமானங்களைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தியா இயக்கி வருகிறது.

கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், சா்வதேச பயணிகள் விமான சேவையை இந்தியா விரைவில் முழுமையாக தொடங்க உள்ளது. இது தொடா்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

திட்டமிடப்பட்ட வழக்கமான சா்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கும் திட்டமிடப்பட்ட வணிக ரீதியிலான சா்வதேச பயணிகள் விமான சேவையை வரும் டிசம்பா் 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குவது எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சா்வதேச விமானங்கள் அனைத்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் கடந்த 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட சா்வதேச பயணத்துக்கான கரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT