இந்தியா

டிசம்பரில் இந்தியா வருகிறாா் விளாதிமீா் புதின்

27th Nov 2021 06:50 AM

ADVERTISEMENT

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அடுத்த மாதம் இந்தியா வருகிறாா்.

இது குறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அடுத்த மாதம் 6-ஆம் தேதி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இரு நாட்டு நல்லுறவு குறித்து விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமரும் ரஷிய அதிபரும் ஆண்டுதோறும் நேரில் சந்திப்பதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளது. அந்த வகையில் நடைபெறும் 21-ஆவது இந்திய-ரஷிய மாநாட்டில் பங்கேற்பதற்காக புதின் இந்தியா வருகிறாா் என்று அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.

கடந்த ஆண்டுக்கான இந்திய-ரஷிய மாநாடு, கரோனா நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 20 ஆண்டு மாநாடுகளும், இந்தியாவிலும் ரஷியாவிலும் மாறி மாறி நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT