இந்தியா

பிரதமர் மோடி அரசைக் கண்டித்து தில்லியில் மெகா பேரணி: காங்கிரஸ் முடிவு

26th Nov 2021 08:37 PM

ADVERTISEMENT

விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக மோடி அரசைக் கண்டித்து மெகா பேரணி நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும்  விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக மோடி அரசைக் கண்டித்து  ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையில் வரும் டிச.12 ஆம் தேதி தில்லியில் மெகா பேரணியை நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்திருக்கிறார்.

மேலும் இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் ’மக்களின்  தீராத வலியையும் துன்பத்தையும் மோடி அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மின்னணு ஊடகங்களின்  ஆதரவுடன், மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து மத உணர்வுகளைத் தூண்டுகிறார்கள்’ என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : congress rally bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT