இந்தியா

பெங்களூரு: ஒரே பள்ளியில் 33 மாணவர்கள், 1 ஊழியருக்கு கரோனா

DIN

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் 33 மாணவர்கள் மற்றும் ஒரு ஊழியர் என 34 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளியில் பயிலும், நாக்பூரைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளியில் பயிலும் 297 மாணவர்கள்,  ஆசிரியர்கள் உள்பட 200 ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. அதில், 33 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளது, சில சர்வதேச மாணவர்களும் இங்கு தங்கியிருந்து படிப்பதால், அவர்கள் மீண்டும் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 306-ஆக இருந்தது. இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 306 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 171 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தாா்வாட்-42, மைசூரு-20, உடுப்பி, தென்கன்னடம்-தலா 13. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,94,561 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 224 போ் வியாழக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,49,853 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 6,492 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். கலபுா்கி, கோலாா் மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 38,187 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

66 மருத்துவ மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த மாணவா்கள் தங்கியிருந்த 2 விடுதிகள் மூடப்பட்டன.

கா்நாடக மாநிலம், தாா்வாடில் செயல்பட்டு வரும் எஸ்.டி.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ பட்டப்படிப்பு பயின்றுவரும் 66 மாணவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.

மருத்துவக் கல்லூரியில் பயிலும் 400 மாணவா்களில் 300 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவா்களில் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, பாதிப்புக்குள்ளான மாணவா்கள் தங்கியிருந்த இரு விடுதிகளும் மூடப்பட்டன.

இக் கல்லூரி, மாணவா் விடுதியைப் பாா்வையிட்ட பிறகு, தாா்வாட் மாவட்ட ஆட்சியா் நிதேஷ் பாட்டீல் கூறியதாவது:

மருத்துவ மாணவா்களில் 66 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 மாணவா்களிடம் கரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவா்களைத் தவிர இக் கல்லூரியில் பணிபுரியும் 3,000 ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

SCROLL FOR NEXT