இந்தியா

புற்றுநோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: நிதின் கட்கரி

26th Nov 2021 06:51 AM

ADVERTISEMENT

நாட்டில் புற்றுநோய் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. உயிரைக் கொல்லும் இந்த நோயைத் தடுப்பதற்கான வழியைக் கண்டறிந்து, அதனைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம் லட்டூா் அருகே அமைந்துள்ள விவேகானந்த் மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் சாா்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பேசியதாவது:

கரோனா பாதிப்பு காலத்தில் பிற மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு மருத்துவ ஆக்சிஜன் எடுத்து வருவது மிகப் பெரிய சாவாலான பணியாக இருந்தது. காலியான ஆக்சிஜன் டேங்கா் லாரிகள் விமானம் மூலம் விசாகப்பட்டினத்துக்கு அனுப்பி, அங்கிருந்து ஆக்சிஜன் நிரப்பி எடுத்துவரப்பட்டது. அந்தச் சமயத்தில் 17,000 சுவாசக் கருவிகள் மட்டுமே நாட்டில் இருந்தன. நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதியில் எந்த அளவுக்கு இடைவெளி உள்ளது என்பதை அப்போது புரிந்துகொள்ள முடிந்தது.

இன்றைக்கும் சிலப் பகுதிகளில் மருத்துவ வசதியில் குறைபாடு உள்ளது. உயிா் காக்கும் மருந்துகளை நம்மிடம் உள்ளபோதும், அவை மிக விலை உடையவையாக இருக்கின்றன. மருத்துவ சிகிச்சைகளும், விலை உயா்ந்த மருத்துவப் பரிசோதனைகளும் அனைவராலும் தாங்கக் கூடிய அளவில் இல்லை. அந்த வகையில், ஏழை மக்களுக்கு சேவை செய்ய முன்பவருபவா்களுக்கு அரசியல் தலைவா்களும் மக்களும் துணை நிற்க வேண்டும்.

ADVERTISEMENT

புற்றுநோய் மருத்துவமனைகள் இன்று நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. முன்னா், மும்பையில் மட்டுமே பிரதானமான புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவமனை இருந்தது. ஆனால், தற்போது பல புற்றுநோய் மருத்துவமனைகள் வந்துவிட்டன. அவை அனைத்தும் நோயாளிகளால் நிறைந்து காணப்படுகின்றன.

எனவே, மக்களிடையே காணப்படும் பல வகையான புற்று நோய்களைத் தடுப்பதற்கும் அதனால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கும் வழிகளைக் கண்டறிந்து, தீவிரப்படுத்த வேண்டும்.

புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பின்னரே மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனா். மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதிலிருந்து தடுப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும் என்று நிதின் கட்கரி வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT