இந்தியா

திரிபுரா தேர்தலில் பரபரப்பு: பாஜக மீது குவியும் குற்றச்சாட்டுகள்

25th Nov 2021 12:06 PM

ADVERTISEMENT

திரிபுராவில் இன்று காலை ஏழு மணிக்கு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால், வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே ஆளும் பாஜகவை சேர்ந்தவர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் வந்து தங்கள் வேட்பாளர்களை மிரட்டிவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் குற்றம்சாட்டியுள்ளன.

அதேபோல், வாக்குச்சாவடிகளுக்குள் வாக்காளர்கள் அனைவரையும் அனுமதிக்கவில்லை என எதிர்கட்சிகள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அடையாளம் தெரியாமல் இருக்க தலைக்கவசம், முகக்கவசங்களை அணிந்து வீடுகளுக்கு சென்று வாக்களிக்க கூடாது என ஒரு கும்பல் மிரட்டிவருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், "அகர்தலா நகராட்சி கவுன்சிலின் பல வார்டுகளில் ஆளும் பாஜகவின் தூண்டுதலின் பேரில் ஏராளமான மர்மநபர்கள் அந்த பகுதிகளுக்குள் ஊடுருவி, எதிர்கட்சி ஆதரவாளர்களை பயமுறுத்திகின்றனர். 

வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 25ஆம் தேதி அன்று, வாக்குச்சாவடிக்கு சென்றால் தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மக்கள் மிரட்டப்படுகின்றனர். வாக்குச்சாவடிக்கு செல்லக்கூடாது என்ற அச்சுறுத்தப்படுகின்றனர். இது போன்ற புகார்கள் பல வார்டுகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முறைகேடு நடைபெறுவது குறித்து திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கருப்பு சட்டை அணிந்திருக்கும் ஒருவர், மற்றவர்களுக்கு வாக்களிப்பது போல் பதிவாகியுள்ளது.

 

Tags : Tripura
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT