இந்தியா

காஷ்மீர்: முக்கியத் தளபதி உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

25th Nov 2021 12:44 PM

ADVERTISEMENT

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் டிஆர்எஃப் இயக்கத்தின் முக்கியத் தளபதி உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று(நவ.24) மாலை தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைக் காவலர்கள் சுட்டுக்கொன்றனர்.

பலியான 2 தீவிரவாதிகளுடன் டிஆர்எஃப் இயக்கத்தின் முக்கியத் தளபதி மெஹ்ரான் யாசினும் கொல்லப்பட்டதாக மாநிலக் காவல்துறை தலைவர் விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பலியானவர்கள் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்றும் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

Tags : Kashmir terrorist
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT