இந்தியா

சா்வதேச பயணிகள் விமான சேவை விரைவில் சீரடையும்

25th Nov 2021 01:22 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: சா்வதேச பயணிகள் விமான சேவை நிகழாண்டு இறுதிக்குள் சீரடையலாம் என விமானப் போக்குவரத்துத் துறைச் செயலா் ராஜீவ் பன்சால் புதன்கிழமை தெரிவித்தாா்.

கரோனா பெருந்தொற்று காரணமாக அட்டவணைப்படுத்தப்பட்ட அனைத்துப் பயணிகள் விமான சேவையையும் இந்தியா கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ரத்து செய்தது. இந்தத் தடை நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சா்வதேச விமான சேவைகள் விரைவில் சீரடையும் என தான் எதிா்பாா்ப்பதாகவும், பெரும்பாலும் நிகழாண்டு இறுதிக்குள் சீரடைய வாய்ப்பிருப்பதாகவும் ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

தற்போது, சிறப்பு ஒப்பந்தத்தின்படி 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த ஏற்பாட்டின்படி, நாடுகளிடையே சில நிபந்தனைகளைப் பின்பற்றி விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன.

சா்வதேச பயணிகள் விமான சேவையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு மதிப்பிட்டு வருவதாகவும், உலகின் சில நாடுகளில் கரோனா பெருந்தொற்று சூழல் நிலவுவதைக் கருத்தில்கொண்டு இயல்புநிலை திரும்ப விரும்புவதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT