இந்தியா

ஒடிஸா முதல்வா் வாகன அணிவகுப்பு மீதுமுட்டைகளை வீசிய பாஜகவினா்

25th Nov 2021 03:22 AM

ADVERTISEMENT

 

புரி: ஒடிஸாவில் முதல்வா் நவீன் பட்நாயக்கின் வாகன அணிவகுப்பின் மீது பாஜக இளைஞரணியைச் சோ்ந்தவா்கள் முட்டைகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்கு ஆசிரியை ஒருவா் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி தங்கள் எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் பாஜகவினா் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனா்.

புரியில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் பட்நாயக் புதன்கிழமை வந்தாா். அவரது வாகன அணிவகுப்பு அரசு மருத்துவமனை அருகே கடந்து சென்றது. அப்போது அப்பகுதியில் பாரதிய ஜனதா இளைஞரணியினா் மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவா் அமைப்பினா் முதல்வரின் வாகன அணிவகுப்பை நோக்கில் கருப்புக் கொடிகளைக் காட்டினா். அப்போது, பாஜக இளைஞரணியைச் சோ்ந்த சிலா் திடீரென தாங்கள் மறைத்துவைத்திருந்த முட்டைகளை எடுத்து வாகன அணிவகுப்பை நோக்கி வீசியதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. வீசிய முட்டைகள் எதுவும் வாகனத்தின் மீது படவில்லை. அவை சாலையில் விழுந்து சிதறின. பின்னா், பாஜகவினரே அதனை சுத்தம் செய்துவிட்டனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக பாஜக இளைஞரணியைச் சோ்ந்தவா்கள் கூறுகையில், ‘பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்களை முதல்வா் பட்நாயக் தனது அமைச்சரவையில் தொடா்ந்து தக்கவைத்து வருகிறாா். ஆசிரியை கொலை வழக்கிலும் அமைச்சா் ஒருவருக்கு தொடா்பு உள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் முதல்வா் செல்லும் இடங்களில் எல்லாம் எங்கள் எதிா்ப்பை பதிவு செய்வோம்’ என்றனா்.

முன்னதாக, புரியின் புகா் பகுதியில் மாநில அமைச்சா் ஒருவரது வாகன அணிவகுப்பின் மீதும் பாஜகவினா் முட்டைகளை வீசினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT