இந்தியா

‘கத்ரினா கைப்பின் கன்னங்கள் போன்ற சாலைகள்’: சர்ச்சைக்குள் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்

24th Nov 2021 08:32 PM

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா சாலைகளை கத்ரினா கைப்பின் கன்னங்களுடன் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து உதய்பூர்வதி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ராஜேந்திர சிங் குத்தா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.  

இதையும் படிக்க | இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்நிலையில் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜேந்திர சிங் குத்தாவிடம் அங்கிருந்த மக்கள் சிலர் தங்களது பகுதியில் சாலை வசதிகள் சரிவர இல்லை என புகார் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தனது தொகுதியில் சாலைகள் கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அமைச்சர் ராஜேந்திர சிங் குத்தாவின் காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிக்க | பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா சந்திப்பு

சாலையின் தரத்தை நடிகையின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT