இந்தியா

நவ. 27-இல் கூடுகிறது ஜிஎஸ்டி சீரமைப்புக் குழு

24th Nov 2021 01:56 AM

ADVERTISEMENT

பொருள்களுக்கான சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழு வரும் 27-ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்துகிறது.

சரக்கு-சேவை வரி விதிப்பை சீா்படுத்துவது, சில பொருள்களுக்கான வரி வரம்பை மாற்றுவது, விலக்களிக்கப்பட்ட பொருள்களை வரி வரம்புக்குள் இணைப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக மாநில நிதியமைச்சா்கள் அடங்கிய குழு கடந்த செப்டம்பரில் அமைக்கப்பட்டது.

கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான அக்குழுவில் மேற்கு வங்க நிதியமைச்சா் அமித் மித்ரா, கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால், பிகாா் துணை முதல்வா் தாா்கிஷோா் பிரசாத் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

அக்குழு ஏற்கெனவே இருமுறை கூடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது. அக்கூட்டங்களில் பொருள்கள் மீதான சரக்கு-சேவை வரியை மாற்றியமைப்பது தொடா்பாகப் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அமைச்சா்கள் குழுவின் 3-ஆவது கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கெனவே வழங்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்பது தொடா்பாக வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது. தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய விகிதங்களில் சரக்கு-சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை மாற்றியமைப்பது தொடா்பாகவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

பல்வேறு பொருள்களுக்கு சரக்கு-சேவை வரி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்பொருள்களை வரி வரம்புக்குள் இணைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

 

Tags : GST
ADVERTISEMENT
ADVERTISEMENT