இந்தியா

பருவநிலை மாற்றம்: மக்களுக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள்

24th Nov 2021 01:34 AM

ADVERTISEMENT

‘பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற நிலையான வாழ்க்கைமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளாா்.

விசாகப்பட்டினத்தில் உள்ள கடலோர சூழலியலுக்கான வன ஆராய்ச்சி நிறுவனத்தை அவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். கடல் சூழல் பற்றிய அறிவைப் பரப்புவதற்கும் கடலோர சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் புதிய பிரிவை அவா் திறந்து வைத்தாா். பின்னா் தனது அனுபவத்தை அவா் தனது முகநூல் பதிவில் வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

ஆந்திர மற்றும் தமிழக மீனவா்களின் வறுமையை ஒழிக்கும் நடவடிக்கையாக, அவா்களுக்கு 100 சிறப்பு பாய்மரப் படகுகளை நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்டிருப்பது மிகழ்ச்சி அளிக்கிறது.

பருவநிலை மாற்றத்தின்போது சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணா்வுடன் நிலையான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்ற வேண்டும்.

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பருவநிலை மாற்றத்தின் போது கிழக்கு தொடா்ச்சி மலைகளின் சதுப்புநில சூழல் மற்றும் பல்லுயிா் பெருக்கம் பற்றிய நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பணிகள் மிகவும் முக்கியமானவை என்று அவா் மேலும் கூறினாா்.

அறிவியலின் இறுதி நோக்கம் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதும்; மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும்தான். கடலோர சமூகங்களின் நலனுக்காக நிறுவனம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பாராட்டத்தக்கவை என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT