இந்தியா

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல்

24th Nov 2021 11:27 AM

ADVERTISEMENT

 

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 17 மாநிலங்களில் 3.61 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழுவின் 56வது கூட்டம் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 3.61 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 1.14 கோடி வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 89 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 52.5 லட்சம் வீடுகள் பயனர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT