இந்தியா

உ.பி. தேர்தல்: ஆம் ஆத்மி, சமாஜவாதி கூட்டணி?

24th Nov 2021 03:40 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் சிங்கை சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை சந்தித்தார். 

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கானப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிக்க |  சர்வதேச விமான சேவை இந்தாண்டு இறுதிக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும்: மத்திய அரசு 

இதுகுறித்து சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஊழல் இல்லா மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த அரசிடமிருந்து விடுவிக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தை உருவாக்குவதற்கானப் பொதுவான திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தொடங்கிதான் உள்ளது. ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து பின்னர் தெரிவிப்போம்" என்றார்.

ADVERTISEMENT

அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சௌதரியைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த வரிசையில் தற்போது ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அகிலேஷ் யாதவ் தனது அறிக்கைகளில், சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க சமாஜவாதி தயாராக உள்ளது என்பதைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : UP Election
ADVERTISEMENT
ADVERTISEMENT