இந்தியா

கனமழை காரணமாக 1.59 லட்சம் மீனவர்களுக்கு ரூ. 3,000 நிவாரணம்: கேரள முதல்வர்

24th Nov 2021 03:13 PM

ADVERTISEMENT

கேரளத்தில் கனமழையால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாத மீனவர்களுக்கு நிவாரணமாக ரூ. 3,000 அறிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதத் தொடக்கத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேரளத்தில் நவம்பர் மாதம் வரை கனமழை நீட்டித்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட செய்தியில்,

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பெரும்பாலான நாள்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் பணிக்கு செல்ல இயலவில்லை. மாநிலத்தில் உள்ள 1,59,481 மீனவர்களுக்கு தலா ரூ. 3,000 நிவாரணமாகா முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிப்பதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT