இந்தியா

பாஜக தலைவர்கள் விடுதியில் கோவா காங்கிரஸ் செயல் தலைவர்: வெடிக்கும் சர்ச்சை

23rd Nov 2021 06:24 PM

ADVERTISEMENT


பாஜக தலைவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு தேர்தல் வியூக வித்தகரைப் பார்க்கவே கோவா காங்கிரஸ் மாநிலப் பிரிவு செயல் தலைவர் அலெய்க்ஸோ ரெஜினால்டோ லௌரென்கோ சென்றதாக காங்கிரஸ் விளக்கம் அளித்தது.

கோவாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அலெய்க்ஸோ பாஜக தலைவர்கள் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து திங்கள்கிழமை நள்ளிரவு வெளியே வந்துள்ளார். அந்த விடுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர ஃபட்னவீஸ் தங்கியிருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதையும் படிக்கபாஜகவின் ஆட்டங்கள் அம்பலமாகிவிட்டன: லாலு பிரசாத் யாதவ் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்

ADVERTISEMENT

இதனால், கோவாவில் சர்ச்சை வெடித்தது.

இந்த நிலையில், கோவா காங்கிரஸ் மாநிலத் தலைவர் கிரிஷ் சோதங்கர் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தார்.

"தேர்தல் வியூக வித்தகருடன் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான்தான் அவரை விடுதிக்கு அனுப்பினேன். அவர் எந்தவொரு பாஜக தலைவரையும் சந்திக்கப்போவதில்லை. என்னால், போகமுடியாததால், அவரை நான் நள்ளிரவில் அனுப்பினேன்" என்றார் கிரிஷ்.

இதுபற்றி அலெய்க்ஸோ கூறியது:

"பாஜக தலைவர்கள் அங்கிருப்பதைப் பார்த்தவுடன், நான் உடனடியாகத் திரும்பிவிட்டேன். என்றும் காங்கிரஸுக்கு விஸ்வாசமாக இருப்பேன்."

Tags : Goa election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT