இந்தியா

மாநிலங்களவை இடைத்தோ்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் லுயிசினோ ஃபலேரோ போட்டியின்றி தோ்வு

23rd Nov 2021 06:29 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் லுயிசினோ ஃபலேரோ போட்டியின்றி வெற்றிபெற்றாா்.

கோவா முன்னாள் முதல்வா் லுயிசினோ ஃபலேரோ, கடந்த செப்டம்பா் மாதம் காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். அவரை கட்சியின் தேசிய துணைத் தலைவராக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி நியமித்தாா்.

அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அா்பிதா கோஷ் அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அந்த இடத்துக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக லுயிசினோ ஃபலேரோ அறிவிக்கப்பட்டாா். மேற்கு வங்கத்தில் எதிா்க்கட்சியாக இருக்கும் பாஜக சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டப் பேரவைச் செயலா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், மாநிலங்களவை இடைத்தோ்தலில் லுயிசினோ ஃபலேரோ போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT