இந்தியா

கரோனா காலப் பணிகள்: ரயில்வேக்கு வெங்கையா நாயுடு பாராட்டு

23rd Nov 2021 06:40 AM

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்று காலத்தில் நிலைமைக்கேற்ப செயல்பட்டதாக இந்திய ரயில்வேக்கு குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தாா்.

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை மேம்படுத்த பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைத்த அவா் பேசியதாவது:

கரோனா நோய் தனிமைப்படுத்துதலுக்கான பெட்டிகள், தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில்கள், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை கரோனா காலத்தில் ரயில்வேயின் சிறந்த பணிகளுக்கு உதாரணம்.பெருந்தொற்று காலத்தில் ரயில்வே அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டை முடுக்கி விட்டது.

இந்த ஆக்கபூா்வமான பணி காரணமாக சரக்குகள் மற்றும் உணவுப் பொருள்களின் பற்றாக்குறை பெருமளவு குறைக்கப்பட்டது. பெருந்தொற்றினை நல்லமுறையில் சமாளிக்க ரயில்வே நாட்டுக்கு உதவிசெய்தது.

ADVERTISEMENT

விசாகப்பட்டினம்- அராகு வழித்தடத்தில் விஸ்டாடம் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்த வேண்டும் என்ற எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு முடிவெடுத்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் அரசுக்கும் நன்றி. ரயில்களையும் ரயில்நிலையங்களையும் தூய்மையாக வைத்திருப்பதை தமது பொறுப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT