இந்தியா

இளைஞர் மீது பெண் அமில வீச்சு; கேரளத்தில் பரபரப்பு

21st Nov 2021 12:17 PM

ADVERTISEMENT

கேரளா பூஜாப்புரா பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு வயது 27. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென வீட்டின் பின்புறத்தில் இருந்து அருண்குமாரின் சத்தம் கேட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினர் வந்து அருண்குமாரை பார்த்தபோது அவர் முகத்தில் அமிலம் வீசப்பட்டு அவர் வலியில் துடித்துக் கொண்டிருந்தார். 
இதையடுத்து உடனடியாக அவர் அடிமாலியில் உள்ள மருத்துவமனைகயில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது, 35 வயதான ஷீபா என்ற பெண்ணுடன் சமூக வலைத்தளத்தின் மூலம் அருண்குமாருக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

பின்னர், இருவரும் காதலித்துள்ளனர். ஆனால், ஷீபாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது அருண்குமாருக்கு பின்னரே தெரிய வந்தது. இதனால் ஷீபாவுடன் பேசுவதையும் அவரை தொடர்பு கொள்வதையும் அருண்குமார் தவிர்த்துள்ளார். 

ADVERTISEMENT

இதனால் கோபமடைந்த ஷீபா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அருண்குமார் மறுக்கவே, அவரிடம் இருந்து ரூ 2 லட்சத்தைக் கேட்டு மிரட்டியுள்ளார் ஷீபா. இது குறித்துப் பேசவே கடந்த செவ்வாய்க்கிழமை அருண்குமார் வீட்டிற்கு ஷீபா சென்றுள்ளார். பேசிக்கொண்டிருக்கும் போதே மறைந்து வைத்திருந்த அமிலத்தை எடுத்து அருண்குமார் மீது ஷீபா வீசியுள்ளார்.

இதையும் படிக்கதீர்வை நோக்கி காங்கிரஸ்; ராஜஸ்தானில் முடிவுக்கு வருகிறதா அதிகார போட்டி?

இவை, சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

அருண்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஷீபாவை அவரது கணவர் வீட்டில் இருந்து காவல்துறையினர் கைது செய்தனர். அமிலத்தை வீசும் போது அது அவர் மீதும் பட்டதால் ஷீபாவுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT