இந்தியா

ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும்: ராகுல் காந்தி

21st Nov 2021 07:38 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

ஆந்திர மாநிலம் கடப்பா, சித்தூா், அனந்தபுரம் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 போ் உயிரிழந்துள்ளனா். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர பிரதேச முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டா் மூலம் பாா்வையிட்டு மீட்பு மற்றும் பயிா்ச் சேதத்தை மதிப்பிட மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டாா். 

இதையும் படிக்க- சர்ச்சைக்கு மேல் சர்ச்சை; சீக்கியர்கள் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினரும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளம், பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு என ஆழ்ந்த அனுதாபம். கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : Rahul Gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT