இந்தியா

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் 5 ஆண்டுகள் நிறைவு: 1.63 கோடி வீடுகள் கட்டி முடிப்பு

21st Nov 2021 12:45 AM

ADVERTISEMENT

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டு, சனிக்கிழமையுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 1.63 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பூமி பூஜை, கிருகபிரவேசம், மாதிரிவீடுகளை பயனாளிகள் பாா்வையிடுதல் மற்றும் அவா்களுக்கு பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் குறித்து தெரிவிப்பது போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ‘அனைவருக்கும் வீடு’ என்ற உயா்ந்த எண்ணத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்ய, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டுக்குள் 2.95 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை 1.63 கோடி வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2021-22-ஆம் நிதியாண்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.7,775.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ரூ.1,47,218.31 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT