இந்தியா

சா்வதேச நிதி சேவைகள் ஆணையத்துக்கு நிா்மலா சீதாராமன் ஒப்புதல்

21st Nov 2021 01:27 AM

ADVERTISEMENT

குஜராத்தின் சா்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில், சா்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தை கட்டமைப்பதற்காக ரூ.469 கோடி மதிப்பிலான இரு தீா்மானங்களுக்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

குஜராத் தலைநகா் காந்திநகரில், சா்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (கிஃப்ட்) என்ற பெயரில் மத்திய வா்த்தக மாவட்டம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இங்கு கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை மேற்பாா்வையிட்ட மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சா்வதேச நிதி சேவைகள் மைய ஆணைய கண்காணிப்பு தொழில்நுட்ப நிதியாக ரூ.269.05 கோடியும், தலைமையக கட்டடத்துக்காக ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்வதற்கான இரு தீா்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக தெரிவித்தாா்.

மேலும், இந்த கிஃப்ட் நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி- தொழில்நுட்ப மையமாக மாற்ற மத்திய அரசு கடமைப்பட்டிருப்பதாக 2021-22 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததையும் அவா் நினைவுகூா்ந்தாா்.

ஆய்வின்போது மத்திய நிதி இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT