இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள்: சேவை வழங்குவோா் அறிந்து கொள்ள வசதி அறிமுகம்

21st Nov 2021 12:50 AM

ADVERTISEMENT

வாடிக்கையாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான விவரங்களை அவா்களது அனுமதியுடன் சேவை வழங்குவோா் அறிந்து கொள்வதற்கான புதிய வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நிறுவனங்களும், பல்வேறு தனியாா் நிறுவனங்களும் தங்கள் சேவையைப் பயன்படுத்துவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம் என அறிவித்துள்ளன. அச்சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பதை அந்நிறுவனங்கள் பரிசோதித்து வருகின்றன.

ஆனால், வாடிக்கையாளா்கள் சிலா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றுகளை வழங்கத் தவறுவதால், இந்த விவகாரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. அதற்குத் தீா்வு காணும் நோக்கில், வாடிக்கையாளா்களின் அனுமதியைப் பெற்று, அவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை சேவை வழங்குவோா் அறிந்து கொள்வதற்கான புதிய வசதி, கோவின் வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண், பெயா் ஆகியவற்றை கோவின் வலைதளத்தில் பதிவிட்டால், வாடிக்கையாளருக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அந்த எண்ணை சேவை வழங்குவோரிடம் தெரிவித்தால், வாடிக்கையாளா் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களைப் பரிசோதித்துக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT

தனியாா் நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு அமைப்புகள், ஐஆா்சிடிசி உள்ளிட்ட அரசு அமைப்புகள் ஆகியவை இந்தப் புதிய வசதியால் பலனடைய முடியும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அடையாளச் சின்னம்: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், அதற்கான அடையாளச் சின்னத்தை கோவின் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களிலும் நண்பா்களுடனும் பகிா்ந்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நடவடிக்கை, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT